ஈரான் இஸ்ரேல், அமெரிக்கா மோதல்
Crude oil prices in India : ஈரான் இஸ்ரேல், அமெரிக்கா மோதலால் ஈரான் மூத்த தலைவர் கமேனி கொல்லப்படத்தை அடுத்து மோதலானது தீவிரம் அடைந்து வருகிறது.
இதன் முக்கிய வணிகம் மேற்கொள்ளும் பகுதிகளை ஈரான் மூடியுள்ளது இது வணிக பரிமாற்றத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என் வல்லுநர்கள் கூறுகின்றனர் .
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி: என்ன பாதிப்பு
மோதலை தொடர்ந்து முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் வேளையில் அது இந்தியா மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வழித்தடம் வழியாக இந்தியா தினமும் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது மூடப்படுவதால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக உயர வாய்ப்பு இருபதாக நிபுணர்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த எண்ணெய் முதன்மையாக ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வருகிறது.
முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் கூறுவது
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் இந்தியா மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கெப்ளரின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா கூறினார்.
இந்த வழித்தடம் வழியாக இந்தியா தினமும் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பெறுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும் .
மாற்று வழிகளை பயன்படுத்துமா இந்தியா
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், எண்ணெய் விநியோகத்திற்காக இந்தியா மாற்று வழிகளைப் பயன்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாற்று வழிகளுக்கு சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் பாதை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி கச்சா எண்ணெய் குழாய் பாதை ஆகியவைகளை பயன்படுத்தலாம் என்று கூறபடுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி : எண்ணெய் வாங்குவதை அதிகரித்த இந்தியா
கடந்த இரண்டு மாதங்களாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வழங்கப்படும் கச்சா எண்ணெயை வாங்குவதை இந்தியா அதிகரித்து இருந்தது.
பிப்ரவரி மாத இறுதிக்குள், இது ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களை எட்டியது, இது கடந்த ஆண்டு 2 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.