

தங்கம் குறித்து எச்சரித்த செபி
Digital Gold Sale in 2025 in India : ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்திய மக்கள் சுமார் 12 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக டிஜிட்டல் தங்கத்தை மக்கள் வாங்குவகு குறித்து செபி எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் தங்கத்திற்கு கூடுதல் வரவேற்பு
இளைஞர்கள், முதல் முறை முதலீட்டாளர்கள் மத்தியில் டிஜிட்டல் தங்கம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. டிஜிட்டல் தங்கம் என்பது ஆன்லைன் வாயிலாக ஒருவர் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம், இதேபோல் சேமித்து வைத்திருக்கலாம்,
இந்த முதலீட்டை ரூ.1 முதல் தொடங்கலாம் என்பது மற்றுமொரு தனிசிறப்பாக இருப்பதால், இதற்கு கூடுதல் வரவேற்பும் கிடைத்துள்ளது என்றால் மிகையாகது.
டிஜிட்டல் தங்கம் குறித்த செபி எச்சரிக்கை
இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை உலோகமாக கைகளில் வாங்குவது கிடையாது, அனைத்தும் டிஜிட்டல் முறையில் நிர்வாகம் செய்யப்படும், சில தளங்கள் தங்கத்தை உலோகமாக டெலிவரியையும் செய்கிறது. ஆனால் இந்த செயல்முறையில் ரிஸ்க் இருப்பதாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக தங்க கவுன்சில் அமைப்பு NPCI அமைப்பின் UPI பரிவர்த்தனை தரவு அடிப்படையில் இந்திய மக்கள் எவ்வளவு தங்கத்தை வாங்கியுள்ளனர் என்பதை கணக்கிட்டு உள்ளது. பின்டெர் தளங்கல், பேமெண்ட் தளங்கள் வழங்கும் டிஜிட்டல் தங்கம் முதலீட்டு திட்டத்தில் 100க்கு 99 பேர் யூபிஐ பேமெண்ட் வாயிலாக தான் வாங்குகின்றனர் என்றும் வெகு சிலரே கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் மூலம் வாங்குகின்றனர். இதன் அடிப்படையில் உலக தங்க கவுன்சில் அமைப்பு இந்த ஆண்டு முதல் முறையாக டிஜிட்டல் தங்க விற்பனை தரவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு யூபிஐ மூலம் 12 டன் தங்கம்
மும்பை ஸ்பாட் விலைப்படி இந்திய மக்கள் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 12 டன் 24 கேரட் தங்கத்தை வாங்கியுள்ளதாக கணக்கிட்டு உள்ளது. அதாவது யூபிஐ மூலம் டிஜிட்டல் தங்கத்திற்காக மக்கள் செலவிடப்பட்ட தொகை ரூ.16,670 கோடியாகும். 2024இல் 8 டன் வாங்கப்பட்ட நிலையில் 2025ல் 12 டன் தங்கம் வாங்கப்பட்டு உள்ளது இந்த ஆண்டு இறுதியில் உலக தங்க கவுன்சில் நிறுவனம் தெரிவித்துள்ளது.