

DMart has reached a new milestone by increasing the number of its branches to 500 in just four days:
DMart - Avenue Supermarts
DMart Share Price Rise Today : சில்லறை விற்பனைத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் டிமார்ட்நிறுவனம், மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை எட்டி முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெறும் 4 நாட்களில் மட்டும் தனது கிளைகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
500 கிளைகள் அதிவேக விரிவாக்கம்
டிமார்ட் நிறுவனம் தனது கிளைகளை 478-லிருந்து 500-ஆக வெறும் 4 நாட்களில் விரிவுபடுத்தியுள்ளது.
சென்னை, புனே, லக்னோ முதல் ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த அசுர வேக விரிவாக்கம் பங்குச் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
உயரும் பங்கு விலை - எகிறும் சொத்து மதிப்பு
நிறுவனத்தின் இந்த அதிரடி வளர்ச்சியால் அதன் பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ரூ.16,100 கோடி
இதன் விளைவாக, நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு இரண்டே நாட்களில் சுமார் ரூ.16,100 கோடி அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தை 1,500 புள்ளிகள் சரிந்த நிலையிலும், டிமார்ட் பங்குகள் மட்டும் சரிவை சந்திக்காமல் 0.55% உயர்ந்து ரூ.4,294.40-க்கு வர்த்தகமாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை டிமார்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
நிபுணர்களின் கணிப்பு
தொடர்ந்து முன்னணி முதலீட்டு நிறுவனமான CLSA, டிமார்ட் பங்கின் விலை ரூ.6,583 வரை உயர வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
85 புதிய கடைகளைத் திறக்க திட்டம்
அதேபோல் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தனது இலக்கை ரூ.4,552 ஆக உயர்த்தியுள்ளது. வரும் நிதியாண்டிற்குள் மேலும் 85 புதிய கடைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய உச்சத்தை நோக்கி
தற்போது டிமார்ட்டின் பங்கு விலை 8% வரை உயர்ந்துள்ள போதிலும், அதன் 52 வார கால உச்சநிலையிலிருந்து இன்னும் 12% குறைவாகவே உள்ளது.
பங்குச் சந்தை நிபுணர்கள் எதிர்பார்ப்பு
எனவே, வரும் நாட்களில் பழைய உச்சத்தை முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையை டிமார்ட் பங்குகள் படைக்கும் எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.