தினசரி 6 கோடி முட்டை உற்பத்தி
namakkal egg rate today சமீபகாலமாக முட்டை விலை தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இதற்கு பல வித காரணங்கள், முட்டை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு தரப்புகளின் வாயிலாக சொல்லப்பட்டது.
பொதுவாக நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.
இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் பெறப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் இயல்பாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
6 ரூபாய் 40 காசுகளாக உயர்ந்த முட்டை விலை
கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் 40 காசுகளாக ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, சில நுகர்வோர் கடைகளில், மக்களுக்கு 7 முதல் 7, 30 காசு வரை கூட விற்கப்பட்டது.
உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைப்பு
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முட்டையின் விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, பண்ணைக் கொள்முதல் விலை 6 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
மற்ற மண்டலங்களின் விலை குறைப்பு, உற்பத்தி அதிகரிப்பு, வட மாநிலங்களில் முட்டை விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் முட்டை விலை குறைப்பு
முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 6 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. விலை குறைப்பு, உற்பத்தி அதிகரிப்பு காரணமாக முட்டை விலை குறைந்தது. ஆலோசனை கூட்டத்தில் முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வரவேற்பு
இதனால், இனி முட்டை விலை கனிசமாக குறையும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 20 காசுகள் குறைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.