தள்ளுபடி விலையில் லாவா ஸ்மார்ட்ஃபோன் : பிளிப்கார்ட் அதிரடி!

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது.
Flipkart Amazing offer 2026 Lava Shark 5G smartphone at discounted price here Features Specifications in Tamil
Flipkart Amazing offer 2026 Lava Shark 5G smartphone at discounted price here Features Specifications in TamilFlipkart
2 min read

லாவாவின் புதிய அப்டேட்

Lava Shark 5G Offer Price in Flipkart : பிளிப்கார்ட் தளத்தில் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

ஆகவே இந்த போனை ரூ.6,999 பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும் என்று லாவா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள்

சக்திவாய்ந்த ஆக்டா கோர் யுனிசோக் டி765 சிப்செட் (Octa Core UNISOC T765) சிப்செட் உடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16M கலர் டெப்த் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே இந்த போனில் உள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

கேமரா அம்சங்கள்

குறிப்பாக 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.

மைக்ரோ எஸ்டி சப்போர்ட்டுடன்

மேலும் எல்இடி பிளாஸ், எச்டி வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு, ரீபோகஸ், மோஷன் போட்டோ, எச்டிஆர், நைட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் இதில் உள்ளது.

லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்சிலரோமீட்டர் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5000mAh பேட்டரி வசதி

இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவும் இதில் உள்ளது.

மேலும் IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவும் இந்த அசத்தலான லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன,

இந்நிலையில் இதன் அப்டேட் மற்றும் சிறப்பம்சங்களால், லாவா விரும்பிகளை தாண்டி, குறைந்த விலையில் ஸ்மார்ட் ஃபோன் வாங்குபவர்கள், தள்ளுபடி விலையில் லாவாவை வாங்குகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in