நாளுக்கு நாள் உயரும் தங்கம் மற்றும் வெள்ளி : தற்போதைய நிலவரம் இதோ!

Gold : சென்னையில் இன்று (ஜனவரி 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் அதிகரித்துள்ளது.இதன்மூலம், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர்.
Gold and silver prices are rising day by day here is the current rate update today in chennai
Gold and silver prices are rising day by day here is the current rate update today in chennaiGoogle
1 min read

முந்தைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

Today Gold Rate in Chennai : அமெரிக்க வரி விதிப்பு, உலக நாடு போர்கள் என்பதன் பிரதிபலிப்பால், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி நடைபெற்று, விலை வாசி உயர்ந்துள்ளது. இதிலும், குறிப்பாக, இதன் தாக்கம் இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 6 மாதங்கள் முன்பு 1 சவரன் 60 ஆயிரத்தில் இருந்து தற்போது 1 லட்சத்தையும் தாண்டி உச்சம் தொட்டுள்ளது.

உச்சம் தொடும் தங்கம் வெள்ளி விலை

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கான விலையை தங்கம் மற்றும் வெள்ளி எட்டியுள்ளன. கடந்த வார இறுதியில் (ஜனவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,760 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விரக்தியில் பொதுமக்கள்

இதைத்தொடர்ந்து,கடந்த வார இறுதியின் 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்துள்ளது. இதன்மூலம், 3 நாட்களில் ரூ.2,960 அதிகரித்துள்ளது. இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.வெள்ளி விலை இன்று கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.பல்வேறு காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், தமிழகம் முதல் இந்திய பொதுமக்கள் வரை மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என்று அச்சத்தில் உள்ளதாக விரக்தி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in