

தங்கம் விலை உச்சம்
today gold rate இந்த ஆண்டு தொடர்ந்து, தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. வெறும் 70 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது 98 ஆயிரத்தில் வந்து நிற்கிறது.
நாளுக்கு நாள் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுவது, இறங்குவதுமாக இருக்கும் நிலையில், சாமானிய மக்களுக்கு தங்கம் ன்பது ஒரு கனவாகவே போய்விடும் நிலையாக இருக்கிறது என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய தங்கத்தின் விலை
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 10) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (டிசம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை
அதேபோல் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
========