

22 காரட் 1 லட்சத்து 120 ரூபாய்
Gold Rate Today in Chennai : தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம், 15ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், விலை சற்று குறைந்துள்ளது.
நேற்றைய தங்கம் வெள்ளியின் விலை
நேற்று முன்தினம் (டிசம்பர் 22) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 23) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் - வெள்ளி விலை
இன்றும் (டிசம்பர் 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ரூ.10 ஆயிரம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. தங்கத்துக்கு இணையாக வெள்ளியின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உச்சம் தொட்டு வருவது நடுத்தர குடும்பத்தினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
==============