
டிரம்ப் வரி விதிப்பு :
Gold Rate Today in Chennai : அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் பிரதிபலிப்பாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
தங்கத்தின் முந்தைய நிலவரம் :
தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 06), ஆபரண தங்கம் கிராம், 11,125 ரூபாய்க்கும், சவரன், 89,000 ரூபாய்க்கும் விற்பனையானது. இதைத்தொடர்ந்து, (அக் 07) தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 11,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 89,600 ரூபாய்க்கு விற்கப் பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு, எதிர்பார்த்ததை விட இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது. இதுவரை வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 90 ஆயிரத்தை தொட்டு, நகைபிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம் :
வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்(Last 5 Days Gold Rate in Chennai) :-
08.10.2025 ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 ஒரு சவரன் ரூ.87,200.