

எச்சிஎல் வேலைவாய்ப்பு அறிவிப்பு
HCL Recruitment 2025 : எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும். இந்நிலையில், தற்போது ஹேக்கத்தான் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இது ‛ஹைபிரிட்' வகை பணியாகும்.
இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்வது நல்லது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் நம் நாட்டின் முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்த எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஜிசிபி டேட்டா இன்ஜினியர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு BigQuery, Cloud Composer or Airflow, Dataflow or Dataproc or data fusion, Python or Pyspark (ஏதாவது ஒன்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்),
DBT, SQL, GKE உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Spanner, Harness, GenAI, Looker உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 13 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், மேற்கூறியவைபடி தகுதியானோர் பணிக்கு விண்ணப்பிக்கும் படி தகவல் வெளியாகியுள்ளது.
=======