

உலக பொருளாதார அமைப்பு வெளியீடு
Anantha Nageswaran About Indian Economy 2026 : ஜி.டி.பி (GDP - Gross Domestic Product) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மற்றும் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார அமைப்பு இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு வளர்ச்சியின் முதலிடத்தில் இந்தியா
பொருளாதார மதிப்பில் 30.51 டிரில்லியன் டாலருடன் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளபோதும், அதன் வளர்ச்சியானது 1.8% என்ற அளவில்தான் உள்ளது. 19.23 டிரில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ள சீனா, 4% வளர்ச்சியையே பதிவு செய்திருக்கிறது.
4.7 டிரில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்தில் உள்ள ஜெர்மனி, மைனஸ் 0.1%-ல்தான் வளர்கிறது. ஆனால், 4.19 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் 4-ம் இடத்தில் உள்ள இந்தியா... 6.2% வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்
இத்துடன், ஒட்டுமொத்த உலக நாடுகளின் மொத்த சராசரி வளர்ச்சி விகிதத்தை (3%) விடவும் இரண்டு மடங்கு அதிகம் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது.
இது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம், போர்கள், வர்த்தக மற்றும் வரிப் போர், பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு சவால்களைக் கடந்து எட்டப்பட்டுள்ள பெருவளர்ச்சியே என்று தெரியவரும் நிலையில், வலுவான நுகர்வோர் செலவினம், அரசின் கொள்கை முடிவுகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தீவிர கவனம், தொழில்துறையின் புதிய முன்னெடுப்புகள் மற்றும் வேகமான தொழில்நுட்ப மயமாக்கம் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்துதான் இதைச் சாதித்துள்ளன என்றால் மிகையாகாது.
இந்தியா பொருளாதாரத்திலும் முதல் இடத்தை பிடிக்கும்
மத்திய, மாநில அரசுகள், தொழில்துறையினர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, தொடர்ந்து உழைத்ததால்தான், நெருக்கடிகளுக்கு நடுவேயும் வலுவாக எழுந்து நிற்கிறோம். கொரோனா காலமான 2020-ல் மைனஸ் 5.8%-ல் இருந்த ஜி.டி.பி வளர்ச்சி(India GDP Growth Rate), அடுத்த ஆண்டே 9.7% அளவுக்கு உயர்ந்ததே அதற்குச் சான்று.
இப்போதும்கூட நுகர்வுக் குறைவு, விலைவாசி உயர்வு, ஏ.ஐ தொழில்நுட்பப் பாய்ச்சல், வேலையிழப்பு, வரிப் போர் எனச் சவால்கள் துரத்தியபடிதான் உள்ளன.
ஆனாலும், எல்லாவற்றையும் சமாளித்து, ‘வேகமாக வளரும் பொருளாதார நாடு’ என இந்தியா நிலைபெற்றிருப்பது, ஒட்டுமொத்த மக்களுக்கும் உத்வேகம் தரும் நிலையில், இதன் வளர்ச்சியில் இது ஒரு தனி இடத்தை பிடித்து உலக நாடுகள் மத்தியில் இந்தியா தன் உட்கட்டமைப்பை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தி பொருாளாதாரத்திலும் முதலிடத்தை பிடிக்கும்.
அனந்த நாகேஸ்வரன் உரை
இந்நிலையில் இந்திய பொருளாதாரம் ஜிடிபி குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கடந்த 10 ஆண்டுகளில், ஜி.டி.பி., மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது.
உலகளவில் அரசியல் சூழ்நிலைகள் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், முக்கியத்துவத்தையும், சர்வதேச உறவுகளில் தன் பலத்தையும் நிலைநிறுத்த இந்தியாவுக்கு வலுவான பொருளாதார வளர்ச்சி கட்டாயம் தேவை.
மேலும். தற்போது உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு 343 லட்சம் கோடி ரூபாய். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், அடுத்த சில ஆண்டுகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தை சமாளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.