

இந்திய எண்ணெய் கழகத்தில் வேலைவாய்ப்பு
Indian Oil Corporation Recruitment 2025 : இந்தியா முழுவதும் உள்ள ரெஃபைனரி பிரிவுகளில் மொத்தம் 2757 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கையில் மத்திய அரசு வேலை வாய்ப்பாக இது பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக கருதப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான காலம் 28.11.2025 முதல் 18.12.2025 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Apprentice Training பிரிவில் பணியிடங்கள்
வேலை வகை மற்றும் காலியிட விவரங்கள் IOCL அமைப்பின் கீழ் Apprentice Training கோட்டகையில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Guwahati, Barauni, Gujarat, Haldia, Mathura, Panipat, Digboi, Bongaigaon, Paradip போன்ற ரெஃபைனரி பிரிவுகளில் Attendant Operator, Fitter, Boiler, Technician Apprentice, Secretarial Assistant, Accountant, Data Entry Operator போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி மற்றும் கல்வித் தகுதி விவரங்கள் இந்த பணிக்கான கல்வித் தகுதி பணியினைப் பொறுத்து மாறுபடுகிறது. B.Sc, Diploma in Engineering, ITI, B.Com, B.A, B.Sc போன்ற பட்டதாரிகள் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Chemical, Mechanical, Electrical, Instrumentation, Petrochemical, Data Entry போன்ற துறைகளில் தகுதி பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு கிடையாது
வயது வரம்பு மற்றும் தளர்வு விண்ணப்பிக்கும் தேதி நிலவரப்படி பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் விதிப்படி SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு தகுந்த வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. Ex-Servicemen க்கும் அரசு கொள்கை படி விடுபட்ட வயது வரம்புகள் உண்டு. ஊதியம் மற்றும் தேர்வு செயல்முறை அப்பிரண்டிஸ் பயிற்சிக்கான மாதாந்திர ஸ்டைபண்ட் அரசு விதிகளின்படி வழங்கப்படும். தேர்வு முறை Merit அடிப்படையில் அமையும். எழுத்துத்தேர்வு எதுவும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும் என்பது முக்கிய அம்சமாகும்.
இதன் மூலம் தகுதியானவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும் நிலையில், விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பதாரர்கள் முதலில் NAPS அல்லது NATS தளத்தில் பதிவு செய்து அதன் பின் IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய வேண்டிய தளம்: iocl.com/apprenticeships. 28.11.2025 காலை 10.00 மணிக்கு விண்ணப்பம் தொடங்கி, 18.12.2025 மாலை 05.00 மணிக்கு முடிவடைகிறது. முக்கிய தேதிகள் மற்றும் ஆவண சரிபார்ப்பு விண்ணப்ப தொடங்கும் நாள் 28.11.2025 என்றும், நிறைவு தேதி 18.12.2025 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்
ஆவண சரிபார்ப்புக்கான பட்டியல் 27.12.2025 அன்று வெளியிடப்படும். ஆவண சரிபார்ப்பு 02.01.2026 முதல் 07.01.2026 வரை நடைபெறும் என IOCL அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அரசு வேலைக்கான சிறந்த வாய்ப்பு இந்த IOCL Apprentice Notification 2025 மத்திய அரசு வேலை வாய்ப்பாகும். திறமையானவர்களுக்கு நாட்டின் முக்கியமான எண்ணெய் கழகத்தில் பணிபுரியும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே தகுதியுள்ளவர்கள் அவசியம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.