

ஸ்டார் பக்ஸ் வரலாறு
Starbucks New CTO Anand Varadarajan : ஸ்டார் பக்ஸ் என்றால் இன்று உலக முழுவதும் தெரியாதோர் யாரும் கிடையாது. அதன் ஆரம்ப காலகட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட் என்னும் நகரில் 1971 ஆம் ஆண்டு 3 நண்பர்களால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் காபி பீன்ஸ் மற்றும் காபி தயாரிக்கும் உபகரணங்களை மட்டும் விற்பனை செய்து வந்தனர்.
ஹோவர்டு ஷூல்ட்ஸ் காலம்
1980 ஆம் ஆண்டு ஹோவர்டு ஷூல்ட்ஸ் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். இத்தாலி காஃபி கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இவர், 1987 ஸ்டார்பக்ஸை வாங்கி காஃபி கடையாக மாற்றினார். அதிலும் மற்ற பானங்கள், உணவுகள் ஆகியவற்றையும் வழங்கினர்.
இன்று ஸ்டார்பக்ஸ் 80 நாடுகளுக்கு மேல் தனது கிளைகளை நிறுவி, தராமான காஃபியை வழங்கி வருகின்றனர். ஸ்டார்பக்ஸ் காஃபி என்பது நடுத்தரவாசிகள் பலரின் உயர்ந்த எண்ணமாகவே மாற்றிவிட்டனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலைமை அதிகாரி
உலகளவில் பிரபலமான காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி., பட்டதாரியான இவர், அமெரிக்காவின் பர்டூ பல்கலை.,யில் சிவில் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் முடித்தவர்.
அனுபவம் மிக்க ஆனந்த் வரதராஜன்
அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவரான ஆனந்த் வரதராஜன், அதற்கு முன் 'ஆரக்கிள்' உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
19 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள வரதராஜன்
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த டெப்ஹால் லெபெவ்ரே, கடந்த செப்டம்பரில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் வரதராஜன், வரும் ஜன., 19ம் தேதி பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் தலைமை பொறுப்புக்கு, இந்தியர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.