சென்னை ஜோஹோவில் காலிப்பணியிடம் : தகுதியானோர் முந்துங்கள்!

சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
Job opportunities at Zoho, Chennai - Apply now! Limited vacancies!
Job opportunities at Zoho, Chennai - Apply now! Limited vacancies!google
1 min read

குறைந்தபட்ச தகுதியில் நிர்ணயம்

zoho chennai hiring முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜோஹோவில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள காலிப்பணியிடம் குறித்து

Java Full stack Developer

ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்ச தகுதிகளாக (Minimum Qualification) சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

அதன்படி விண்ணப்பம் செய்வோர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் ரோலில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை நன்றாக இருக்க வேண்டும். மேலும் Preferred Qualification ஆக சில தரப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, அங்குலர்(Angular), MySQL மற்றும் Cassandra உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் ஹை வால்யூம் டெவலப்பிங் , லோ லேட்டன்சி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

திறமையை பொறுத்து சம்பளம்

அதேபோல் வெல் டிசைன்ட்ஸ் ரைட்டிங், டெஸ்ட்டபிள் மற்றும் எபிசியன்ட் கோட் உள்ளிட்டவையும் அதேபோல் CI/CD பைப்லைன்ஸ், ஆட்டோமேஷன் டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

சென்னையில் வேலை

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று தெரிவிக்கப்படவில்லை.

இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in