பெண்களுக்கென லைட் வெயிட் ஸ்கூட்டர்கள் : வெறும் 60 ஆயிரம் தான்!

Zelio Little Gracy E-Scooter Launch in India : லைட் வெயிட் ஸ்கூட்டர்களை விரும்பும் பெண்களுக்கு ஏற்றவாறு தற்போது வெளியாகியுள்ளது 2 மாடல், அதன் முழு விவரத்தை பார்ப்போம்.
Lightweight Zelio Little Gracy E-Scooter Launch no license needed, 75 Km range Check Prices Features Specifications in Tamil
Lightweight Zelio Little Gracy E-Scooter Launch no license needed, 75 Km range Check Prices Features Specifications in TamilZelio Auto Pvt. Ltd
1 min read

பெண்களுக்கென அறிமுகமாகியுள்ள ஸ்கூட்டர்கள்

Zelio Little Gracy E-Scooter Launch in India : பெண்களுக்கான ஸ்கூட்டர்கள் மின்சார இரு சக்கர வாகனங்களின் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெண்கள் பயன்படுத்த உகந்த லைட் வெயிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

குறைந்த கிலோ, உயரம், ஸ்டைலிஷ் லுக், நகரப் பயணத்திற்கு ஏற்ற சக்தி, மற்றும் பட்ஜெட்டுக்குள் கிடைப்பது போன்ற பல அம்சங்கள் காரணமாக, இந்த வகை ஸ்கூட்டர்களை பெண்கள் பெருமளவில் தேர்வு செய்து வருகிறார்கள். மேலும் இதன் புதிய அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தான்

அதே ஸ்கூட்டர் குறைந்த விலையில் அறிமுகம் ஆனால் என்ற கனவினை நிஜமாக்கியுள்ளது Zelio Little Gracie ஸ்கூட்டர். வெறும் 80 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த மாடல், நெரிசலிலும் பெண்கள் நம்பிக்கையுடன் ஓட்டக்கூடிய வகையில் உள்ளது. ஒரு சார்ஜில் 60 முதல் 90 கிமீ வரை பயணம் செய்யும் சக்தி கொண்டது.

சென்டர் லாக், USB சார்ஜிங், மற்றும் லைசென்ஸ் தேவையில்லாத அம்சம் பெண்களுக்கு எளிதான பயன்பாடுகளை வழங்குகிறது. விலை சுமார் ரூ. 55,000 - 60,000 வரை மட்டுமே என்று தகவல் வெளியாகியுள்ளது.

Okinawa Lite ஸ்கூட்டர்

இதைப்போல், லைட் வெயிட் ஸ்கூட்டர் பட்டியலில் அடுத்து இருப்பது Okinawa Lite ஆகும். நகரப் பயணத்திற்கே பொருத்தமான ஒரு மாடல் ஆகும்.

1.25 kWh பேட்டரி மூலம் 60 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. 25 கிமீ மேக்ஸ் ஸ்பீட், 740 மிமீ சீட் உயரம் என்பதால் பெண்களுக்கு எளிதாக கையாளக்கூடியது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 69,093. அதே நேரத்தில் ஆம்பியர் மேக்னஸ் EX நீண்ட ரேஞ்ச் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வு எனவே பெண்கள் இந்த மாடல் ஸ்கூட்டர்களையும் தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்தலாம்.

விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

பெண்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் வந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 121 கிமீ ARAI ரேஞ்ச், 82 கிலோ எடை மற்றும் 'லிம்ப் ஹோம்' வசதி போன்றவை இந்த மாடலை சிறப்பாக்குகின்றன.

விலை ரூ. 67,999 முதல் 94,900 வரை. லைட் வெயிட், பட்ஜெட்டுக்குள் மற்றும் தினசரி பயணத்திற்கான வசதிகளுடன் கிடைக்கும் மேற்கண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெண்களுக்கு சிறந்த தேர்வுகளாக இருக்கும் என்ற நிலையில், இதன் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in