வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 213.14கோடி அபராதம்-உச்சநீதிமன்றம் அதிரடி!

WhatsApp Supreme Court Case: சமமற்ற ஒப்பந்தங்களில் உள்ள நுகர்வோரின் தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Meta and WhatsApp have moved the Supreme Court against a ₹213.14 crore penalty imposed by the CCI over WhatsApp's 2021 privacy policy
Meta and WhatsApp have moved the Supreme Court against a ₹213.14 crore penalty imposed by the CCI over WhatsApp's 2021 privacy policySource : Google
1 min read

வாட்ஸ்அப் செயலி நிறுவனத்திற்கு அபராதம்

WhatsApp Supreme Court Case Update in Tamil : வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, தனியுரிமைக் கொள்கை தொடர்பாக மெட்டா பிளாட்பார்ம்ஸ்–வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. தனது ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், நமது தனிப்பட்ட தரவு விற்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் சுரண்டப்படுகிறது என்றார்.வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த், மெட்டா பிளாட்பார்ம்ஸ்–வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

நீதிபதி சூர்யா பதில்

இதைத்தொடர்ந்து பேசிய அவர் “தரவுப் பகிர்வு என்ற பெயரில் இந்த நாட்டு மக்களின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது. தரவின் ஒரு வார்த்தையைக் கூட நீங்கள் பகிர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டின் அரசியலமைப்புக் கோட்பாடுகளை நீங்கள் கேலியாக மாற்றுகிறீர்கள். நீங்கள் குடிமக்களின் தனியுரிமையை மீற முடியாது.இது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான ஒரு நாகரிகமான வழி. அதைச் செய்ய நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம். நீங்கள் ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்துகொள்வதை அனுமதிக்க முடியாது

தனியுரிமை இந்த நாட்டில் தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறது. எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் சமரசம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.தொழில்நுட்ப நிறுவனங்களின் தனியுரிமை விதிமுறைகள் குடிமக்களுக்குப் புரியாத வகையில் மிகவும் தந்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சமமற்ற ஒப்பந்தங்களில் உள்ள நுகர்வோரின் தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க முடியாது. இந்த மனுக்களில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தையும் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டும். இவ்வழக்கில் வருகிற 9-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்.”மேலும், மெட்டா மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in