Amazon Job in Chennai : அமேசானில் வேலைவாய்ப்பு! சென்னையில் பணி!

Amazon Job in Chennai : ஜோஹோவை தொடர்ந்து அமசானிலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Amazon Job in Chennai
Amazon Job in Chennai
1 min read

சென்னையில் வேலை

Amazon Job in Chennai : பல்வேறு துறைகளில் கால்பதித்து வரும் அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து அமேசான் இயங்கி வருகிறது. சென்னையில் பெருங்குடியில் செயல்படும் அமெசான் நிறுவனத்தில்(Perungudi Amazon Hub Job Vacancy) காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விபரம் வருமாறு :

தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட், குவாலிட்டி சர்வீசஸ், டிவைஸ் டெக் சப்போர்ட் (Device Associate, Quality Services, Device Tech Support) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தகுதி படிப்பு :

மேலும் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங் அனுபவம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் இன்னும் பிளஸ் பாயிண்டாகும். இதுதவிர சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட்டிங் அறிவு இருக்க வேண்டும். அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில் இருக்க வேண்டும்.இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் படிக்க : ZOHO Careers : ஐ.டி ஊழியர்களுக்கு ஜாக்பாட்- அழைக்கிறது ஜோஹோ!

சம்பளம் குறித்த அறிவிப்பு

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ள நிலையில்,விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்து வாய்ப்பினை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in