

போக்கோ நிறுவனம்
POCO C85 5G Launch Date in India : இந்திய சந்தையில் விற்கப்படும் போக்கோ சீரியஸ் ஸ்மார்ட்போனுக்கு எப்பொழுதும் நல்லதொரு வரவேற்பு இருக்கும். அதாவது, நல்லதொரு அப்டேட் மற்றும் சிறப்பம்சத்துடன், மலிவான விளையில் வெளிவருவதால், இதற்கு ஒரு பெருங்கூட்டமே இருக்கும்.
போக்கோவின் ஒவ்வொரு நகர்வையும், போக்கோ பயனாளர்கள் வரை போக்கோவின் புதிய வருகை பயனாளர்களும் அதை உற்றுநோக்கி வருவர்.
அப்படி இருக்கையில், தற்போது போக்கோவின் புதிய அப்டேட் நிறைந்த மொபைல் ஃபோன் ஒன்று இந்திய சந்தையில் வெளியாகவுள்ளது என்று போக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
போக்கோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்
இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 15C 5ஜி-யின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ C85 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 SoC வழங்கப்படுகிறது. இது மலிவு விலையில் நம்பகமான 5G இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
போக்கோவின் C85-யின் கூடுதல் சிறப்பம்சங்கள்
கூடுதல் அம்சங்களாக புகைப்படம் எடுப்பதற்கு, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. இது நீண்ட கால பேட்ரி பேக்கப் வழங்குவதை உறுதி(POCO C85 5G Specifications in Tamil) செய்கிறது.
பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எத்தனை நிறங்களில் இந்த மொபைல் ஃபோன் வெளிவரும் என்றும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போக்கோ C85 5ஜி ஸ்மர்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் பிளிப்கார்ட் மற்றும் போக்கோ ஆஃப்லைன் வருகையை புதிய போக்கோ வருகை பயனாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.