

உச்சத்தை தொடும் தங்கம்
2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 என்றும் ஒரு சவரன் 97 600 ரூபாய் என்றும் வரலாற்று உச்சத்தை எட்டியது.
ஏற்ற இறக்கத்தில் விலை
குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் வேகமாக தங்கம் விலை உயர்ந்தது. அக்டோபரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முழுவதும் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வந்த தங்கம் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.
Rs. 97,000 நெருங்கும் தங்கம்
சென்னையில் நேற்று 11, 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்றைய தினம் கிராமுக்கு 90 ரூபாய் விலை உயர்ந்து 12,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு மீண்டும் 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கம் நேற்று 95 ,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 720 ரூபாய் விலை உயர்ந்து 96,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் 1,05,336
சென்னையில் 24 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 13,069 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 98 ரூபாய் விலை உயர்ந்து 13,167 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று 1,04,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 784 ரூபாய் விலை உயர்ந்து 1, 05,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் - 80,520
18 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 9,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 70 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் பத்தாயிரம் ரூபாயை கடந்து 10,065 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் விலையும் 80 ஆயிரம் ரூபாயை கடந்து 80,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2 லட்சத்தை நெருங்கும் வெள்ளி
வெள்ளியை பொருத்தவரை கிராமுக்கு நான்கு ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,96,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வார காலத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 25 ரூபாயும் கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. விரைவில் வெள்ளி விலை கிலோ 2 லட்சத்தை தாண்டி விடும் எனத் தெரிகிறது.
==================