Samsung நிறுவனத்தின் புதிய அப்டேட் : விலையே ரூ.7400 தான்!

Samsung Galaxy A07 4G Price in India : சாம்சங் நிறுவனம் Samsung Galaxy A07 4G குறித்து முழு அப்டேட்டையும் வௌயிட்டு, அதன் குறித்த விலை யையும் அறிவித்து, சாம்சங் பயனர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Samsung Galaxy A07 4G Price in India Release Date Specifications Specs Features Review in Tamil
Samsung Galaxy A07 4G Price in India Release Date Specifications Specs Features Review in TamilSamsung Galaxy A07 4G
2 min read

சாம்சங் நிறுவனத்தின் புதிய போன்

Samsung Galaxy A07 4G Price in India : கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி (Samsung Galaxy A07 4G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது ப்ளூடூத் SIG வலைத்தளத்தில் இந்த 5ஜி போன் காணப்பட்டுள்ளது.

சாம்சங் ஏ07 4ஜி சிறப்பம்சம்

குறிப்பாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த தொடக்கத்தில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி போனின் விவரக்குறிப்புகளை வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் அம்சங்கள் வெளியாகும்.

மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி போனின் விலை போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி அம்சங்கள் முக்கியமானவை (Samsung Galaxy A07 4G Specifications) தரமான ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Helio G99 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது

இந்த சாம்சங் போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே 720 x 1600 பிக்சல்ஸ் அறிமுகம்

6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

கூடுதலாக பாதுகாப்பு அப்டேட்

குறிப்பாக One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் கூட இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல அம்சங்களும் அறிமுகம்

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் 4ஜி

அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.

ரூ.7400 தான் விலை

மேலும் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்த போனின் எடை 184 கிராம் ஆகும். இந்த சாம்சங் போனை தற்போது ரூ.7,399 விலையில் வாங்கிவிட முடியும்.

தற்போது இந்த மாடலில் 5ஜி குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளதால், அதனையும் சாம்சங் விரும்பிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in