Samsung 5G : சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி : சாம்சங்கின் புதிய அப்டேட்!

Samsung Galaxy A07 5G Launch Date in India : சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஃபோன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Samsung Galaxy A07 5G India Launch Announced Features, Specification, Price with 50-Megapixel Camera
Samsung Galaxy A07 5G India Launch Announced Features, Specification, Price with 50-Megapixel CameraSource : Samsung Galaxy A07 5G
2 min read

சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A07 5G Specifications):

Samsung Galaxy A07 5G Launch Date in India : சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி போன் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 800 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சிறப்பான வேகம்

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 ) சிப்செட் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

மெமரி கார்டு நீட்டித்துக் கொள்ளலாம்

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 வருட ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1080 பிக்சல்ஸ் வீடியோ மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

அதேபோல் இந்த போனின் மூலம் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும்.IP54 டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மேலும் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. பின்பு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் ஸ்டோர் வழியாக ஃபோனை வாங்க முடியும்

6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். லைட் கிரீன், லைட் வயலட் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்த போனை வாங்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in