Close Friends-க்கு தான் இனி ஸ்டேடஸ் : வாட்ஸ்அப் வெளியிட்ட அப்டேட்!
'Close Friends' வசதி
WhatsApp Status New Update in Tamil : வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும்போது, அது உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் அல்லது நீங்கள் தேர்வு செய்யும் சிலருக்கு மட்டுமே தெரியும் வகையில் செட்டிங்ஸ் மாற்ற முடியும்.
தனிப்பட்டியலை உருவாக்கலாம்
ஆனால், ஒவ்வொரு முறையும் இதை மாற்றுவது கடினமாக இருக்கும். இந்தப் புதிய 'Close Friends' வசதி மூலம், உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மட்டும் கொண்ட ஒரு தனிப் பட்டியலை உருவாக்கலாம்.
நீங்கள் பகிரும் குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்கள் அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எப்படி செயல்படும்?
இந்த புதிய வசதி இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போலவே செயல்படும் என்று கூறப்படுகிறது.
1. நீங்கள் ஒரு ஸ்டேட்டஸ் போடும்போது, அதை 'Everyone' (அனைவருக்கும்) அல்லது 'Close Friends' (நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்) என்று தேர்வு செய்யும் வசதி இருக்கும்.
2. 'Close Friends' ஆப்ஷனைத் தேர்வு செய்தால், நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே அந்த ஸ்டேட்டஸைப் பார்க்க முடியும்.
3. இந்த ஸ்டேட்டஸைச் சுற்றி பச்சை நிற வளையம் (Green Circle) தோன்றும். இது சாதாரண ஸ்டேட்டஸிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்று தெரியவந்துள்ளது.
விரைவில் தனியுரிமை ஆப்சன்
தனியுரிமைக்கு முக்கியத்துவம் பலர் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அலுவலக நண்பர்கள் அல்லது தூரத்து உறவினர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை,
சிலரின் தங்களின் விடயங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு தெரிய வருவதையும் விரும்பாததால், அவர்களுக்கென பிரத்யேகமாக இந்த வசதி கொண்டுவரப்படுகிறது.
தனியுரிமையை பராமரிக்கலாம்
இதன் மூலம் பயனர்கள் தங்கள் தனியுரிமையை (Privacy) இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta) வெர்ஷனில் சோதனையில் உள்ளது.
விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புது அப்டேட்டில் வாட்ஸ்அப்
கூடுதல் தகவல்கள் இதுமட்டுமின்றி, வாட்ஸ்அப் நிறுவனம் கட்டணச் சேவை (Paid Subscription) ஒன்றையும் சோதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பிரத்யேக ஸ்டிக்கர்கள், தீம்கள் மற்றும் கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், 'Close Friends' வசதி அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகவே கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
