தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொள்கிறோம் - ஸ்ரீதர் வேம்பு!

ZOHO Founder Sridhar Vembu : தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்கிறோம் என ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ZOHO Founder Sridhar Vembu About His Journey At 40th Private College Convocation in Chennai
ZOHO Founder Sridhar Vembu About His Journey At 40th Private College Convocation in Chennai
1 min read

ஜோஹோவின் வளர்ச்சி

ZOHO Founder Sridhar Vembu : ஆரம்ப காலகட்டத்தில் அட்வெண்ட் நெட்வொர்க் என தொடங்கி, இன்று உலக முண்ணனி நிறுவனங்களுக்கு போட்டி போடும் அளவிற்கு, வளர்ந்து நிற்கிறது நாம் அனைவரும் அறிந்த ஜோஹோ. 2021 ஆம் ஆண்டு அரட்டை செியலியை அறிமுகம் செய்தது, ஆனால் அதன் பதிவிறக்கம் இன்று ஒரு நாளில் லட்சங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து உலாவின் அறிமுகம், மத்திய அரசின் ஜோஹோ செயலிகள், ஈமெயில் மாற்றம் என இன்று மென்பொருள்களில் இந்தியாவின் ஒரு நிழலாகவே மாறியுள்ளது.

ஸ்ரீதர் வேம்புவின் நன்றி

மத்திய அரசின் இந்த மாற்றங்களுக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடர்ந்து, தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார். மேலும், ஜோஹோவின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் மற்றும் ஜோஹோ வேலைவாய்ப்புகள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.

ஸ்ரீதர் வேம்பு உரை

இந்நிலையில், சென்னையில் நடந்த தனியார் கல்லூரியின் 40வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீதர் வேம்பு(Sridhar Vembu at College Convocation), ’மாணவர்களிடம் முயற்சிகள் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் இருக்க வேண்டும். இந்தியாவின் சுயசார்பு நோக்கிய பயணத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க : Zoho : ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன ஜோஹோ! யார் இந்த ஸ்ரீதர் வேம்பு?

தோல்விகளில் இருந்து பாடம்

நாங்கள் மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விரும்பவில்லை. தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்கிறோம். இது நமது திறமைகளை நீண்ட காலம் வெளிப்படுத்த உதவும். இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கின்றனர் என்றும் இவர்கள் மட்டுமே சுயசார்பு நோக்கிய பயணத்தில் உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை வளர்க்க போதுமானது. நாங்கள் குறை சொல்வதை விரும்பவில்லை என்பதால், இவை அனைத்தும் சாத்தியமானது’ என்று பேசினார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in