கனவு நனவானது... விக்ரம் பிரபுவின் 26-வது படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி!

விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
A dream come true... Instagram star Amala Shaji in Vikram Prabhu's 26th film!
A dream come true... Instagram star Amala Shaji in Vikram Prabhu's 26th film!source:google, ai
1 min read

A dream come true... Instagram star Amala Shaji in Vikram Prabhu's 26th film!

’விக்ரம் பிரபு 26’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'சிறை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் தனது 26-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தயாரிப்பும் இசையும்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இப்படத்தைச் சித்தார்த் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.

யுவன் - விக்ரம் பிரபுவின் காம்போ

2017 ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரிப்படத்தில் விக்ரம் பிரபுவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் முறையாக யுவன் ஷங்கர் ராஜா - விக்ரம் பிரபு கூட்டனி இணைகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு

அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் மும்முரமாக சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திரையில் அறிமுகமாகும் அமலா ஷாஜி

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி நடிக்கவுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராமில் 42 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார்.

அமலா ஷாஜியின் நெகிழ்ச்சிப் பதிவு

இதுதொடர்பாக திரைப்பட போஸ்டரைப் பகிர்ந்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா ஷாஜி, "சிறிய தொடக்கமாக இருந்தாலும் இது எனக்கு மிகவும் சிறப்பான தொடக்கம். எனது கனவு மெய்ப்பட்டுள்ளது.

எனது முதல் படம் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியையே தரும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கீர்த்தி சுரேஷின் டோரதி படம்: இளையராஜா பாடிய "முத்துமணி" பாடல் வெளியீடு!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in