

A massive flop in theaters... 1 billion views on YouTube: A Telugu film sets a world record!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெறத் தவறிய ஒரு திரைப்படம், இணையதளத்தில் வெளியாகி உலக சாதனை படைக்கும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? ஆம், அப்படி ஒரு விசித்திரமான சாதனையை நிகழ்ந்துள்ளது ஒரு தெலுங்கு திரைப்படம்.
ஜெய ஜானகி நாயகா - தெலுங்கு திரைப்படம்
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் 'ஜெய ஜானகி நாயகா'.
தியேட்டர் ரிலீசில் பெரும் நஷ்டம்
காதல், அதிரடி சண்டைக் காட்சிகள் எனப் பல வணிக ரீதியான அம்சங்கள் நிறைந்திருந்தும், இத்திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களைக் கவரத் தவறி, தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
பென் மூவிஸ் நிறுவனத்தின் விடாமுயற்சி
ஆனால், இத்திரைப்படத்தின் விதி 2019 இல் தலைகீழாக மாறியது. 'பென் மூவிஸ்' (Pen Movies) நிறுவனம் இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையைப் பெற்று, தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது.
வட இந்திய ரசிகர்கள் மத்தியில் இந்த ஆக்ஷன் படத்திற்கு அசாத்திய வரவேற்பு கிடைத்தது.
யூடியூபில் உலக சாதனை
தற்போது இத்திரைப்படம் யூடியூப் தளத்தில் 1 பில்லியன், அதாவது 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, உலகிலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல் முழுநீளத் திரைப்படம் என்ற வரலாற்று உலக சாதனையைப் படைத்துள்ளது.
எந்த திரைப்படம் வெற்றி பெறும் , தோல்வியடையும், உலக சாதனை படைக்கும் என்பது ரசிகர்களையும், காலத்தையும் பொருத்தே இருக்கிறது, திரையரங்க தோல்வியைத் தாண்டி, டிஜிட்டல் தளத்தில் இப்படம் அரிய சாதனை படைத்துள்ளது சினிமா உலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
=====