

'Durandhar 2:The Revenge' has taken the digital film world by storm, amassing 50 million views! |cinema
'துரந்தர் தி ரிவெஞ்ச்' புதிய சாதனை
இந்திய ஓடிடி சந்தையின் அத்தனை முந்தைய சாதனைகளையும் தவிடுபொடியாக்கி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் வசூல் மற்றும் பார்வைகளில் புதிய சாதனையை எட்டியுள்ளது.
ஓடிடியில் 50 மில்லியன் பார்வை
இப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியான முதல் வார இறுதியிலேயே சுமார் 50 மில்லியன் அதாவது 5 கோடி பார்வைகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மிக முக்கியமாக, இத்திரைப்படம் தியேட்டர்களில் வெளியான முதல் வார இறுதியில் பெற்ற வரவேற்பை விட, தற்போது ஓடிடியில் ஐந்து மடங்கு கூடுதல் பார்வையாளர்களைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிர்வாகம் மகிழ்ச்சி
இந்த இமாலய வெற்றி குறித்து ஜியோஸ்டார் நிறுவனத்தின் இந்தி மற்றும் ஆங்கில பொழுதுபோக்கு வணிகப் பிரிவுத் தலைவர் அலோக் ஜெயின், தங்களுக்கு கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட வரவேற்பு எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பான்-இந்தியா பிளாக்பஸ்டர்
இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டதால், இந்தியாவின் பெருநகரங்கள் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது.
கனெக்டேட் டிவி மூலம் பங்களிப்பு
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படத்தின் ஒட்டுமொத்த வாட்ச்-டைமில் 60 சதவீதப் பங்களிப்பு, ஸ்மார்ட் டிவி எனப்படும் 'கனெக்டட் டிவி' மூலமாகவே கிடைத்துள்ளது.
ரசிகர்களை கட்டிப்போட்ட கூடுதல் சிறப்பம்சங்கள்
பார்வையாளர்களைத் தக்கவைக்க, திரைப்படத்துடன் சேர்த்து 'ரா & அன்தேகா' என்ற பிரத்யேகப் பதிப்பும், திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய 30 நிமிட சிறப்பு முன்னோட்டக் காட்சியும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
=====