Karur : கரூர் உயிரழப்பு சம்பவம்- மனம் திறந்த நடிகர் அஜித்குமார்!

Actor Ajith Kumar About Karur Stampede Death : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் மனம் திறந்துள்ளார்.
Actor Ajith Kumar About Karur Stampede Death Incident in TVK Vijay Campaign
Actor Ajith Kumar About Karur Stampede Death Incident in TVK Vijay CampaignGoogle
1 min read

கரூர் நெரிசல் உயிரிழப்பு

Actor Ajith Kumar About Karur Stampede Death : கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பேரில் சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேசுபொருளான கரூர் சம்பவம்

இந்த உயிரிழப்பிற்கு பிறகு தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இது குறித்த தகவல் பரவி, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் நெட்டிசன்கள் என பலரும் தங்களது விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் இந்த சம்பவம் குறித்து தனியார் ஊடக நேர்காணலில் மனம் திறந்துள்ளார்.

அஜித்குமார் கருத்து

இதுகுறித்து நேர்காணலில் பேசிய அவர்,தனது சொந்த விசயங்கள் மற்றும் கார் ரேஸ் குறித்து பகிர்ந்து விட்டு, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள். கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க : வெளியானது முத்துராமலிங்க தேவரின், தேசத்தலைவர் படம் - விவரம் இதோ!

திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது

கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி என கேள்வி எழுப்பிய அவர், இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கமின்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். ஆனால், உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் அன்பை காட்ட வேறு வழிகள் உண்டும். முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in