

மலேசியாவில் நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி
Jana Nayagan Audio Launch Update in Malaysia : தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
மலேசியாவில் கொண்டாட்டம்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் முன்பே ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தனர். எனவே தளபதி விஜயின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
முந்தைய அறிவிப்புப்படி 27 -12 என மலேசியாவில் உள்ள ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த ஸ்டேடியம் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் மலேசியா
விஜயின் ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியால் மலேசியாவே ஸ்தம்பித்து உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து வந்ததால், அங்குள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்குள் உள்ளாகி மக்கள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர்.
மேளதாளங்களுடன் ரசிகர்கள்
தமிழ்நாட்டில் விஜய் படம் ரிலீஸ் ஆனால் தியேட்டர் முன் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்வதைப் போல், மலேசியாவிலும் ஆடியோ லாஞ்ச் நடைபெறும் மைதானத்தின் முன்பாக மேள தாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிரேன் உதவியுடன் நிறுவப்பட்ட பேனர்கள்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் நடைபெற இருக்கும் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நுழைவு வாயிலில் விஜய்யின் பிரம்மாண்டமான ஜனநாயகன் பட பேனர் வைத்துள்ளனர்.
கிரேன் உதவியோடு இந்த பிரம்மாண்ட பேனர் நிறுவப்பட்டு இருக்கிறது. ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை தளபதி திருவிழா என்கிற பெயரில் ஒரு கான்சர்ட் ஆக நடத்துகிறார்கள்.
இதில் ஆடியோ லாஞ்சுக்கு முன்பாக, விஜய்யின் கிளாசிக் ஹிட் பாடல்களை அதை பாடிய ஒரிஜினல் பாடகர்களே பாட இருக்கிறார்கள் என்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அரசியல் சார்ந்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏதும் இருக்கக்கூடாது என்று மலேசியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், விஜயின் இறுதி படமாக அவரது முழு சினிமா சாயலை இதில் காணலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.