தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடியா- வெளியான அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் இந்தியில் வெளியான 'தேரே இஷ்க் மே' திரைப்படம் அதிரடியாக 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்ளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
Actor Dhanush's Tere Ishq Mein movie hits 100 crores Box Office Collection Worldwide update in Tamil
Actor Dhanush's Tere Ishq Mein movie hits 100 crores Box Office Collection Worldwide update in TamilGoogle
2 min read

தேரே இஷ்க் மே திரைப்படம்

Dhanush Tere Ishk Mein Movie Box Office Collection : நடிகர் தனுஷ் 5வது முறையாக 100 கோடி கிளப்பில் தேரே இஷ்க் மே எனம் படத்தின் மூலம் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தொடர்ந்து அயராது உழைத்து வருகிறார். இவரின் அயராத உழைப்பு தொடர்ந்து புது நடிகர்கள் பலருக்கும் ஒரு முண்ணுதாரணமாக இருந்து வருகிறது என்றால் மிகையாகாது.

100 கோடி வசூல் உறுதியானது

100 கோடி வசூல்: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இந்தியில் தனுஷ் நடித்து முதல் முறையாக வெளியான ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட்டில் 92 கோடி வசூலை சாத்தியமாக்கினார் தனுஷ். மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

6 நாட்களில் அதிரடியாக உலகளவில் தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 92 கோடி ரூபாய் கிராஸ் வசூலை தேரே இஷ்க் மே ஈட்டிய நிலையில், ஓவர்சீஸில் 8 கோடி ரூபாய் வசூலுடன் சேர்த்து, 100 கோடி கிளப்பில் தேரே இஷ்க் மே இணைந்துவிட்டது என்பது தெளிவாகியுள்ளது.

5வது படம்

ராஞ்சனாவில் கிடைத்த 92 கோடி வசூலை தற்போது 100 கோடியாக உயர்த்தி நடிகர் தனுஷ் 5வது முறையாக 100 கோடி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தமிழில் தனுஷுக்கு முதல் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்த படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான்.

அந்த படத்தைத் தொடர்ந்து வாத்தி, ராயன், குபேரா உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின. தற்போது 5வது படமாக தேரே இஷ்க் மே இணைந்துள்ளது. ராஞ்சனா திரைப்படமே 100 கோடி வசூல் என சிலர் கூறுகின்றனர். ஆனால், அந்த படம் உலகளவில் 92 கோடி தான் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கர்ணன், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் 70 கோடி வரை வசூல் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

2025ல் தனுஷ் ஹாட்ரிக் வெற்றி

நடிகர் தனுஷ் இந்த ஆண்டு நடித்த குபேரா திரைப்படம் அவருக்கு 100 கோடி வசூலை வாரி குவித்தது. அதனை தொடர்ந்து தமிழில் அவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் 72 கோடி வரை வசூல் ஈட்டி படத்தின் பட்ஜெட்டை தாண்டி வெற்றிப் படமாக மாறியது.

இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றியாக தேரே இஷ்க் மே 100 கோடி வசூலை 6 நாட்களில் கடந்துள்ளது. இந்த வாரம் இந்தியில் துரந்தர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், பாலிவுட்டில் தொடர்ந்து 2வது வாரத்திலும் தனுஷ் கல்லா கட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 200 கோடி வரை வசூலை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in