

துல்கர் சல்மான் என்ட்ரீ
Dulquer Salmaan Kaantha Movie 2025 Trailer Release Update : மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளத்தை வாரி குவித்துள்ளார். அப்படி இருக்கையில் விசித்திராமன கதாபாத்திரங்களை தேர்வு செய்து துல்லியமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் நல்லதொரு வசூலை பெற்றது.
காந்தா புதிய படம்
இதைத்தொடர்ந்து, தற்போது துல்கர் சல்மான் கதாநாயகநாக, சமுத்திரக்கனி, ராணா தக்குபதி உள்ளிட்ட முன்னணி நட்சித்திரங்களும் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். காந்தா என்ற தலைப்பு பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பவர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாறு குறித்து இப்படம் உருவாகியுள்ளது.
காந்தா படம் வெளியீடு தேதி :
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில்(Kaantha 2025 Movie Theatrical Release Date in Tamil) வெளியாக உள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது வரை 2 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸை சினிமா பிரியர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.