லப்பர் பந்து ரீமேக்கில் இணையும் ஜோடி - 27 வருடங்கள் கழித்தா?

Lubber Pandhu Movie Telugu Remake Update in Tamil : ராஜசேகர் மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் 27 வருடங்கள் கழித்து லப்பர் பந்து ரீமேக் படத்திற்கு ஜோடி சேர்ந்துள்ளனர்.
Actor Rajasekhar Ramya Krishnan Reunite after 27 years Couples Role for Lubber Pandhu Remake
Actor Rajasekhar Ramya Krishnan Reunite after 27 years Couples Role for Lubber Pandhu RemakeGoogle
1 min read

தமிழ்மொழி லப்பர் பந்து ரீமேக்

Lubber Pandhu Movie Telugu Remake Update in Tamil : தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோர் நடித்த 'லப்பர் பந்து' படம் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்ற வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 31 ஓடிடியில் வெளியாகி மக்கள் மத்தியில் வசூலை வாரி குவித்தது.மொத்தமாக இப்படத்தின் வசூல் 47 கோடிக்கு மேல் குவித்துள்ளது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற செய்தி தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தின் பணிகளில் களமிறங்கியுள்ளாரம், நடிகர் ராஜசேகர். லப்பர் பந்தை எதிர்நோக்கிய தெலுங்கு ரசிர்களுக்கு இவரின் இந்த அப்டேட் குஷிப்படுத்தியுள்ளது.

ராஜசேகர் - ரம்யா கிருஷ்ணன் ஜோடி

அதவாது தமிழில் வெற்றி கொண்டாடத்திற்கு பிறகு தெலுங்கில் ரீமேக் செய்யம் ராஜசேகருடன் இணைந்து இந்த படத்தை சசி இயக்கப்போகிறாராம். ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

27 வருடங்களுக்கு பிறகு இணையும் நடிகர்கள்

ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு 'அல்லரி பிரியுடு', 'பலராம கிருஷ்ணனுலு' போன்ற படங்களில் ராஜசேகருடன் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்.அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 'லப்பர் பந்து' ரீமேக் படத்துக்காக பிறகு அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். மீண்டும் இணைந்துள்ள இந்த ஜோடியின் திரை வருகைக்கு அவர்களது ரசிர்கள் காத்திருக்கும் நிலையில், இதுகுறித்து அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in