Goa: 100 பிறவியும் ’ரஜினிகாந்த்’ ஆகவே பிறக்கணும்: உருக்கமான பேச்சு

Rajinikanth Lifetime Achievement Award At Goa IFFI 2025 : 100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Actor Rajinikanth Receives Lifetime Achievement Award in Goa IFFI 2025 International Film Festival Latest News in Tamil
Actor Rajinikanth Receives Lifetime Achievement Award in Goa IFFI 2025 International Film Festival Latest News in TamilGoogle
1 min read

சென்னையில் இருந்து கோவா சென்ற ரஜினி

Rajinikanth Lifetime Achievement Award at Goa IFFI 2025 : `திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவிக்கப்ட்டார்.

கௌரவிக்கப்பட்ட ரஜினிகாந்த்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் படங்களுடன், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் ரஜினிகாந்தின் மகத்தான பங்களிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிரபலமான கலாச்சாரத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ள ரஜினிகாந்த், பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2016) மற்றும் தாதாசாகேப் பால்கே (2020) உள்பட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

ரஜினிகாந்திற்கு நினைவுப் பரிசு

பாராட்டு விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ரஜினிகாந்துக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜூ, நடிகர் ரன்வீர் சிங், மற்றும் பல நடிகர்கள் பங்கேற்றனர்.

100 பிறவிகள் பிறந்தாலும் ரஜினிகாந்தாக...

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கௌரவத்தை தமக்கு அளித்ததற்காக மத்திய அரசுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திரைத்துறையையும், நடிப்பையும் தீவிரமாக நேசிப்பதால், கடந்து வந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது, 50 ஆண்டுகளை 10 அல்லது 15 ஆண்டுகள் போல தாம் உணர்வதாகவும் “100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்(Rajinikanth Speech At Goa IFFI 2025)” என்று தெரிவித்தார்.

240 படங்கள் திரையிடப்பட்டது

இந்தக் கொண்டாட்டத்தின் மூலம், இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025, மொழி மற்றும் புவி எல்லைகளைத் தாண்டி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒருசேர ஊக்குவிக்கும் ஒரு புகழ்பெற்ற கலாச்சாரத்தை கௌரவித்து வழிநடத்துகிறது.

ரஜினிகாந்தின் பொன்விழா, ஒரு தனிப்பட்ட மைல்கல்லை மட்டுமின்றி இந்திய கலாச்சாரத்தை வடிவமைப்பதில் திரைத்துறையின் மாற்றகரமான சக்திக்கு ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.

கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கிய 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, நேற்றுடன் நிறைவடைந்தது. இப்படவிழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in