Padayappa 2 : படையப்பா 2 உறுதியா? : அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

Rajinikanth Video on Padayappa 2 Movie Update in Tamil : படையப்பா படத்தை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பி வைத்ததாக படையப்பா படம் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
Actor Rajinikanth Release Video on Padayappa 2 Movie Update and Behind the Scenes Of Padaiyappa Movie Making in Tamil
Actor Rajinikanth Release Video on Padayappa 2 Movie Update and Behind the Scenes Of Padaiyappa Movie Making in TamilRajinikanth X
1 min read

மனம் திறந்தார் சூப்பர்ஸ்டார்

Rajinikanth Video on Padayappa 2 Movie Update in Tamil : கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகிறது, படத்தின் முதல் வெளியீடு அன்றே நல்லதொரு வசூலை ஈட்டி, சூப்பர் ஸ்டாரின் வசூல் படங்கள் பட்டியலில் இதுவும் இணைந்தது. தற்போது புதிய டிரெண்டாக பலைய படங்களை மறு வெளியீடு செய்து வருகின்றனர். எனவே, தற்போது படையப்பா ரீரிலீஸ் ஆகவுள்ள நிலையில், மனம் திறந்தள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயலலித்தாவுக்கு காட்ட வேண்டாம் என பயந்தார்கள்

இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதியில் மறுவெளியீடாக இருக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், படையப்பா படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கும் தொடர்பு இருந்ததாக பரவிய வதந்தி தொடர்பாகவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள : ”நான் கடந்த 1996-ல் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தேன். அப்போதுதான் படையப்பா படம் எடுத்துக்கொண்டிருந்தோம். நீலாம்பரி பாத்திரம் குறித்து அப்போது வதந்தி பரவியது. படம் வெளியான பின்பு ஜெயலலிதா, படையப்பா படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தார். சிலர் ஜெயலலிதாவிடம் படத்தை காண்பிக்க வேண்டாம் என பயந்தார்கள்.

படையப்பா திரைப்படம் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும்

அதில் என்ன இருக்கிறது என்றுகூறி, நான் பட ரீலை, போயஸ் தோட்ட இல்லத்துக்கு அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னார் என கேள்விப்பட்டேன். அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.

பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நந்தினி கதாபாத்திரம் அதிகமாக பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் படையப்பா. படையப்பா திரைப்படம் எந்த ஓடிடி தளத்துக்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை. இப்படம் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

படையப்பா 2 ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் அமையும்

மேலும், ஜெயிலர் 2 எல்லாம் வந்த நேரத்தில், ஏன் ‘படையப்பா 2’ செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது. அடுத்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி கூறுவார். நீலாம்பரி என்ற டைட்டிலில் படையப்பா இரண்டாம் பாகத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம்.எல்லாம் சரியாக நடந்தால் படம் நிச்சயமாக வரும், ரசிகர்களுக்கு விருந்தாகு அமையும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in