

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்
Actor Sivakarthikeyan Parasakthi Movie Update in Tamil : சிவகார்த்திகேயன் என்றால் பெஸ்ட் ஆங்கர் என்று அனைவரும் அறிந்ததே, அதுவே அவரின் முகப்பிரபலத்திற்கு ஒரு அடித்தளம், ஆனால் இன்று அவரின் வளர்ச்சி, அளப்பரியது, கடின உழைப்பின் வெற்றி என்றே சொல்லலாம். மிமிக்ரி மூலம் தன்னை நிரூபித்து தனக்கென ஒரு தனிபாணியை கடைபிடித்து பின்னர், பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத்(Sivakarthikeyan First Movie) தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.
ஒவ்வொரு படமாக தன்னை நிரூபித்த சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகவும் தன்னை முதன்மை படுத்தினார். பின்னர், வெற்றி படங்களின் சொந்தகாரரகி, தமிழ் சினிமா முண்ணனி நட்சத்திரங்கள் பட்டியலில் தவிர்க்க முடியாக ஒரு நட்சத்திரமாக உருவெடுத்தார்.
அமரன் படத்தின் வெற்றி
பின்னர், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், அதன்பின் சரிவர வெற்றி படங்கள் இல்லாமல் தடுமாறி வந்தார். பின்னர், 2024 ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம் தயாரிப்பில் வெளியான அமரன்(Amaran Movie) படத்தில் முழுமையான முயற்சி மற்றம் கதைகளத்தை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலகளவில் ஒரு நல்ல கதாநாயகனாக தன்னை முன்னிறுத்தினார்.
சிவகார்த்திகேயன் பராசக்தி படம்
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்டியலில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன்(Parasakthi Cast & Crew) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் வெளியீடு
‘பராசக்தி’ படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம்(Parasakthi Movie Release Date in Tamil) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடலின் புரொமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்(Parasakthi First Single Promo Date & Time) என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.எனவே, இந்த போஸ்டரை ரீடுவிட் செய்யும் ரசிகர்கள், தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.