சேயோன் குறுகிய நாட்களுக்குள் வெளியீடு : சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு!

Seyon Movie Release Date Update in Tamil : சிவகார்த்திகேயனின் அடுத்த படமான சேயோன் குறித்து அறிவிப்பு வீடியோவை வெளியிட்டது படக்குழு.
Actor Sivakarthikeyan Starring Seyon Movie Release Date Update in Tamil
Actor Sivakarthikeyan Starring Seyon Movie Release Date Update in TamilSource : Raaj Kamal Films International
1 min read

பிறந்தநாளில் வெளியான சேயோன் அறிவிப்பு

Seyon Movie Release Date Update in Tamil : சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தனது பிறந்தநாளை பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan Birthday Date) கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரமுகர்கள், சின்னத்திரை நடிகர் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படம் குறித்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

குறுகிய காலகட்டத்திற்குள் வெளியாகும் சேயோன் திரைப்படம்

இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சேயோன்’ அறிமுக வீடியோவினை வெளியிட்டுள்ளது

படக்குழு. குறுகிய கால தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி, அக்டோபரில் வெளியாகும் என்று படக்குழு இப்போதே அறிவித்துள்ளது.

இது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.

அக்டோபர் 16-ம் தொடங்கி நீண்ட விடுமுறை நாட்களில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது. இதில் சிவகார்த்திகேயனின் லுக், வசனம் என அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதன் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் ஒளிப்பதிவாளராக விவேக் விஜயகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சேயோன் அறிவிப்பு வீடியோ வைரல்

சிவகார்த்திகேயனின் கடைசி படமாக வெளிவந்த பராசக்தி பெருமளவில்,வரவேற்பு கிடைக்காவிட்டாலும் வணிக ரீதியாக ஓரளவு வசூல் செய்தது. சுதா கொங்காரா இயக்கத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படம் குறித்து அறிவிப்பு முன்னே கசித்த நிலையில், அதன் வெளியீடு குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக படக்குழு காணொளியுடன் பகிர்ந்துள்ளது.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில், பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் என்னை ரசிப்பவர்களுக்காக, என்னை நேசிப்பவர்களுக்காக,என்னைவிட என்னைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களுக்காக, என்னுடைய ரசிகர்களுக்காக, என் சகோதர சகோதரிகளுக்காக, சேயோன், சூரசம்பவம் Loading என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் சேயோன் அறிவிப்பு காணொளியுடன், அவரது பதிவை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in