

சிலம்பரசன் திரைப்பயணம்
Actor Vijay Seuthupathi Join Silambarasan TR's Arasan Movie Update : சிம்பு என்று அழைக்கப்பட்டு சிறுவயது முதலே திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து முன்னிலை நிறுத்தி வருகிறார் டி.ஆர் ராஜேந்திரனின் இளைய மகனான சிலம்பரசன் என்ற சிம்பு.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சரிவர படங்களில் நடிக்காமல் உடல் எடை ஏற்றம் உள்ளிட்டவைகளில் சோர்ந்து இருந்த நடிகர் சிம்பு(Silambarasan TR Arasan Movie). தனது உடல் எடையை குறைத்து, இடைவெளியே இல்லாமல் நடிக்கும் அளவிற்கு கால்ஷீட் கொடுத்து, வெற்றி படங்களின் மூலம் தனது ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டாடத்தில் ஆழ்த்தி வருகிறார்.
சிம்புவின் அப்டேட் :
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
அரசன்பட நட்சத்திரங்கள்
இந்த படத்தில்(Arasan Movie Cast And Crew in Tamil), சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோவும் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
அரசன் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி
இந்த நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் புதுமையை வெளிப்படுத்தி மாஸ்டர் படம் முதல் தொடர்ந்து திரைத்துறையில் ஜொலித்து வரும் விஜய்சேதுபதிக்கு இப்படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரம் அமையும் என்று இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து, விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷியில் ஆழ்த்தியுள்ளது.