

Vikram Movie Update 2026 :
சீயானாக மாறிய விக்ரம்
சேது திரைப்படத்தின் மூலம் சீயானாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவரின் திரைப்படங்கள் தமிழ்த் திறையுலகில் வசூலை குவிக்கத் தவறுவதில்லை.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
இவர் நடிப்பில் வெளியான தில், தூள், ஜெமினி சாமி, பிதாமகன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தன.
வீர தீர சூரன்
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் அடுத்தபாகம் வரும்போது தான் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்றும் பேசப்பட்டது.
இதேபோல் இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ படம் பெரும் வெற்றி அடையவில்லை என்றாலும் அந்த படத்தில் விக்ரமின் சிறந்த நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
விக்ரமின் பங்களிப்பு
பொதுவாக விக்ரம் ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பவர் அல்ல. அவர் எந்த திரைப்படத்தில் இருந்தாலும் அவரின் கூடுதலான பங்களிப்பு , சிறப்பான தோற்றம் கதைக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பது, கதை தேர்வு செய்வது என இவை அனைத்திற்கும் பாராட்டு பெறக்கூடியவர்.
துருவ் விக்ரமின் ’பைசன்’
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அனுபமா பரமேஷ்வரன் கதாநாயகியாக நடிக்க ’பைசன்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். பைசன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
விக்ரம் vs துருவ் விக்ரம்
துருவ் விக்ரமின் வருகைக்குப் பின்னர் விக்ரம் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பை குறைத்துக்கொள்வாரோ, படங்களும் முன்னர் போல ஹிட் அடிக்கவில்லை, எந்தவித புதுப் படங்களுக்கான அறிவிப்புகளும் வரவில்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
விக்ரமின் அமைதி
ஆனால் இதை எதையுமே கண்டுகொள்ளாத விக்ரம் அமைதியாக மௌனம் காத்தார். இந்நிலையில் விரதம் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
”சில நேரங்களில் அமைதியாக இருப்பது தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காகத்தான். இந்த வருடம் என்னை ஈர்க்கும், நெகிழ்ச்சியான கதைகளுக்காக காத்திருந்தேன்.
4 புதிய படங்களில்
இப்போது நான் மிகவும் போற்றும் இயக்குநர்களுடன் நான்கு படங்களில் நடிக்க உள்ளேன். 4 படங்களும் வெவ்வேறு மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டது .
அன்பன்,சீயான்
இந்தப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். அன்பன், சீயான் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விக்ரமின் இந்த பதிவையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.