

Ajith AK64 Movie Official Announcement August Director Adhik Ravichandran
நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் (AK64) குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டு காத்திருப்பு – தயாரிப்பாளர் யார்?
'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், நடிகர் அஜித்தின் 64-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல் இருந்தது அஜித் ரசிகர்களிடையே பெரும் குழப்பமும், சோகமும் ஏற்பட்டிருந்தது.
நடிகர் அஜித்தின் அதிக சம்பளம் காரணமாகவே பிற தயாரிப்பாளர்கள் அவரை வைத்துப் படம் இயக்க முன்வரவில்லை என்றும் தகவல்கள் பரவி வந்தன.
தயாரிப்பு யார்?
கடைசியாக 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படம் லாபகரமான படமாக அமைந்தபோதிலும், அந்நிறுவனம் மீண்டும் அஜித் படத்தை உடனடியாகத் தயாரிக்க முன்வரவில்லை.
இதனால், தற்போது நடிகர் அஜித்தே தனது 64-வது திரைப்படத்தை சொந்தமாகத் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்
இந்நிலையில் AK64 திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசியுள்ளார்.
"ஏகே - 64 திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன. வரும் ஆகஸ்ட் மாதம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். அறிவிப்பு வந்த உடனேயே படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கும்."
உச்சகட்ட மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ள இந்த அதிகாரப்பூர்வ அப்டேட் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
=====