

அகண்டா 2 திரைப்படம்
Akhanda 2 Thaandavam Box Office Collection Worldwide : நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இருப்பினும், இதன் தெலுங்கு பதிப்பு வியாழக்கிழமையே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் இப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. அகண்டா 2 படத்தின் வசூலைப் பொறுத்தவரை, வியாழக்கிழமை வெளியான தெலுங்கு பதிப்பு ரூ.7.8 கோடி வசூலித்தது,
மற்ற மொழிகளிலும் படம் நல்லதொரு வணிக வசூல் வரவேற்பை பெற்று வருகிறது.
அகண்டா 2 இதுவரை 30 கோடி
அகண்டா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான அகண்டா 2 படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை படம் அதிர வைத்தது.
முதல் நாளில் ரூ.22 கோடியுடன் படம் தனது கணக்கைத் தொடங்கியது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளது.
வார இறுதியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என வர்த்தக ஆய்வாளர்கள் நம்பும் நிலையில், இதன் வசூல் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகண்டா 2 படக்குழு தாண்டவம் ஒரு ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமா திரைப்படம். இதை போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ளார். 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷான் சக்சேனா தயாரிப்பாளர்கள். அகண்டா 2-ன் நட்சத்திர பட்டாளத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, ஜெகபதி பாபு, கபீர் துஹான் சிங், சாஸ்வதா சட்டர்ஜி மற்றும் ரான்சன் வின்சென்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் உள்ளனர்.
அகண்டா 2 பட்ஜெட்
2021ல் வெளியான அகண்டா படத்தின் தொடர்ச்சிதான் அகண்டா 2. இரண்டு படங்களிலும் நந்தமுரி பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் அவர் இரட்டை வேடத்தில் வருகிறார்.
அகண்டா ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.150 கோடி வசூலித்தது. அகண்டா 2-ன் பட்ஜெட் ரூ.200 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அகண்டா முதல் பாகத்தின் வசூலை மிஞ்சுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.