

அல்லு அர்ஜுன் திரைப்பயணம்
Allu Arjun Wins Dadasaheb Phalke Award 2025 : அல்லு அர்ஜுன் என்றல் உலகளவில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கும் எனறால் இன்றியமையாதது. அதிலும் புஷ்பா படத்தின் வருகைக்கு பிறகு, இவரது அசுர வளர்ச்சி எண்ணிலாடங்காதது.
200 படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜூன்
இந்நிலையில், 2003 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய அல்லு அர்ஜுன், இதுவரை 200 படங்களில் நடித்துள்ளார். ஆர்யா, தேசமுடுரு போன்ற படங்களின் மூலம் ஆரம்பகாலங்களில் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொண்ட தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், புஸ்பா படத்தின் மூலம் மேலும் அவரது ரசிகர் பட்டாளத்திற்கு வலு சேர்த்தார்.
எதிர்கால படங்களாக
திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பல விளம்பரங்களிலும் நடித்துள்ள இவர், இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.
எதிர்காலத் திட்டங்களாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் புதிய படத்தில் நடிப்பதோடு மேலும், திரிவிக்ரம் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதை வென்ற அல்லு அர்ஜுன்
2025 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் அக்டோபர் 30 ஆம் தேதி வழங்கப்பட்டன. அதில் பல்கலை வித்தகர் (Most Versatile Actor) என்ற மதிப்பு மிகுந்த விருதை அல்லு அர்ஜுன் வென்றார். இந்த விருதுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்
நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்ட அல்லு அர்ஜுன்
இந்நிலையில் விருதை வென்ற அவர், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த நம்பமுடியாத கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி. இந்த விருதை எனது ரசிகர்களுக்கு பணிவுடன் அர்ப்பணிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் நன்றி
அண்மையில் புஷ்பா 2 படத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிக்கருக்கான விருதை அல்லு அர்ஜுன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் பதிவின் மூலம் ரசிர்களுக்கு நன்றி தெரிவித்த இவருக்கு, ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
===