’அரசன்’ படத்தில் நடிகர் சிம்புவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன் !

Arasan Movie Update in Tamil : அரசன படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Arasan Movie Update Priyanka Mohan to star as the female lead opposite Actor Silambarasan TR News in Tamil
Arasan Movie Update Priyanka Mohan to star as the female lead opposite Actor Silambarasan TR News in Tamilsource : google
1 min read

சிம்புவிற்கு கதாநாயகியாகும் பிரியங்கா மோகன்

Arasan Movie Update in Tamil : அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருவதாகவும் தற்போது அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடசென்னை பின்னணி

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அரசன். இப்படம் வட சென்னையின் பின்னணியைக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிம்புவிற்கு கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் இணைந்த யோகிபாபு, டி.ஜே

ஏற்கெனவே நடிகர்கள் யோகி பாபு மற்றும் டி.ஜே. ஆகியோர் படப்பிடிப்பின் இரண்டாம் கட்டத்தில் இணைந்துள்ளனர். தற்போது பிரியங்கா மோகனும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2026 -ல் வெளியாகுமா?

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படம் 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

’மேட் இன் கொரியா’ திரைப்படம்

பிரியங்கா மோகன் நடிப்பில் மார்ச் 12 ஆம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது.

54 நாடுகளில் ட்ரெண்டிங்

இதன்மூலம் உலகளவில் டாப் 10 பட்டியலில் கிட்டத்தட்ட 54 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக பிரியங்கா மோகம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in