

தமிழை தொடர்ந்து தெலுங்கில் வெளியீடு
Bison Movie Box Office Collection Worldwide : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரனும், அமீர், பசுபதி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வணிக ரீதியாகவும் உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ள 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசன் நேர்காணல்
பைசன் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதற்கு பல தரப்பட்ட சினிமா சுவையுள்ள மக்கள் இன்றளவும் தியேட்டர்களுக்கு சென்று தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு தனியாகவும், குழுவாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது சூட்டிங் பயணத்தையும் படத்தின் வெற்றி குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு வருகிறது.
70 கோடி வசூல்
அதன் வரிசையில் 10 கோடி என ஆரம்பமாகி, 30, 50 கோடிகள் என தொடர்ந்து 'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி(Bison Movie Box Office Collection Worldwide Total) வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வரும் நிலையில், பைசன் திரைப்படம் மேலும், எதிர்பார்ப்பை தூண்டிவருகிறது, எனவே, இதன் வசூல் 100 கோடியை எட்டுமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.