இந்தியில் ரீமேக்
Thalaivar Thambi Thalaimaiyil Hindi Remake : பொங்கலுக்கு தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் உருவான திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பார்த்து மிகவும் பிடித்து போக, இத்திரைப்படத்தை இந்தியில் தயாரிக்க ரீமேக் உரிமையை பெற்ற்றருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது .
திரைப்பட கொண்டாட்டம்
சமீபத்தில் படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து அதனை கொண்டாடும் விதமாக, அன்றைய நாளில் ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு வேட்டி சேலையை தயாரிப்பாளர்கள் பரிசளித்து கொண்டாட்டத்தை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
ஓடிடி தளத்தில் வெளியீடு
ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் இருக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு திருமண வீட்டையும், மரண வீட்டையும் கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்களே திரைப்படத்தின் கதையாக அமைகின்றது இத்திரைப்படம்.
தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 13ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.