"No Caste No Religion" - நடிகர் பார்த்திபனுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்குக : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

No Caste No Religion: நடிகர் பார்த்திபன் 'சாதி - மதமற்றவர்' எனச் சான்றிதழ் வழங்கக் கோரி முதலில் வேளச்சேரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.
Caste- and Religion-less Person" — Issue Certificate to Actor Parthiban Within One Week!
Caste- and Religion-less Person" — Issue Certificate to Actor Parthiban Within One Week!source:Actor parthiban,Insagrame
2 min read

"Caste- and Religion-less Person" — Issue Certificate to Actor Parthiban Within One Week! Madras High Court Issues Stern Order!

பார்த்திபனின் மனு பின்னணி

பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுக்கு, அவர் கோரியபடி 'சாதி மற்றும் மதமற்றவர்' என்பதற்கான சான்றிதழை ஒரு வார காலத்திற்குள் வழங்கும்படி சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

"கடந்த 1958-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்த எனக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பிறகு சான்றிதழ்களைப் பெறவில்லை.

எனவே என்னிடம் சாதி, மதத்தைத் தெரிவிக்கும் பிறப்புச் சான்றோ அல்லது கல்விச் சான்றுகளோ இல்லை."

முன்னுதாரணமாகத் திகழ விருப்பம்

மேலும் சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தான் கருதுவதாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ விரும்புவதாகவும் நடிகர் பார்த்திபன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சாதி மதமற்றவர் சான்று

இதற்காக 'சாதி - மதமற்றவர்' எனச் சான்றிதழ் வழங்கக் கோரி முதலில் வேளச்சேரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

தேர்தல் பணிகள் காரணமாகத் நடிகர் பார்த்திபனின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க இயலவில்லை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றம் இதில் தலையிட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவிட வேண்டும் என பார்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒருவார காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும்

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் சாதி, மதமற்றவர் எனக்கோரிய மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி,

நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு வார காலத்திற்குள் 'சாதி, மதமற்றவர்' என்ற சான்றிதழை வழங்க வேண்டும் எனச் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பார்த்திபனின் உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு

மேலும், இதுதொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நண்பர்களே! இந்த சமூக விழிப்புணர்வு நல்மாற்றதை முன்னெடுக்கும் என் நல்லெண்ணத்தை வாழ்த்திப் பாராட்டும் அனைவருக்கும் நன்றி !

ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க

அரசின் வேலை வாய்ப்புகள் , அரசின் சலுகைகள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான நற்பலன்கள் பலருக்கும் கிடைப்பதனால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.

சமுதாய நோக்கத்திற்காக

என் போன்ற சிலருக்குத் அச்சலுகைகள் தேவைபடாமல் இருக்கலாம் . அப்படிப் பட்டவர்கள் இச்சலுகைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதனால், அச்சலுகைகள் தேவைபடுவோருக்கு இன்னும் கூடுதலாகக் கிடைக்க ஏதுவாகும் .

G O (Government Order) pass

எனவே தேவைப்படாதவர்கள் மட்டும் இந்த சாதி மதமற்றவர் சான்றிதழை பெற முன்வருகையில் என் முயற்சியின் மூலம் ஒரு G O (Government Order) pass ஆவது பெரியளவில் பயனளிக்கும்.
நல்லதை மட்டுமே வரவில் வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

NO வடிவில் வித்தியாசமான கண்ணாடி

மேலும், நீதிமன்றத்திற்கு வந்த பார்த்திபன் NO வடிவில் வித்தியாசமான கண்ணாடியையும் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in