

Dadasaheb Phalke International Film Festival Awards 2026 Winners List
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விருது விழா
இந்தியத் திரையுலகின் தந்தை என அழைக்கப்படுவர் தாதா சாகேப் பால்கே. இவரது பெயரில் வழங்கப்படும் 'தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2026' மும்பையில் நேற்று ( 20-11-2026) கோலாகலமாக நடைபெற்றது.
கமல்ஹாசன், இளையராஜா மற்றும் சாண்டி மாஸ்டருக்கு விருது
இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த மூவருக்கு முக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன்
திரைத்துறையில் நீண்டகாலமாகத் தனது தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு 'திரைத்துறையில் சிறந்த பங்களிப்பு' (Outstanding Contribution to the Film Industry) எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இசைஞானி இளையராஜா
அதேபோல் இசைத்துறையில் மகத்தான சாதனைகள் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு 'இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு' (Outstanding Contribution in Music Industry) எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சாண்டி மாஸ்டர்: 'கூலி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மோனிகா' பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான விருதை சாண்டி மாஸ்டர் வென்றுள்ளார்.
முக்கியத் திரைப்பட விருதுகள் வெற்றியாளர்கள் பட்டியல்
சிறந்த திரைப்படம்: துரந்தர்
சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (துரந்தர்)
சிறந்த தயாரிப்பாளர்கள்: ஆதித்யா தார், லோகேஷ் தார், ஜோதி தேஷ்பாண்டே (துரந்தர்)
சிறந்த நடிகர்: ரன்வீர் சிங் (துரந்தர்)
சிறந்த நடிகை: அனீத் பத்தா (சயாரா)
சிறந்த விமர்சனங்கள் பெற்ற திரைப்படம்: காந்தாரா சாப்டர் 1
சிறந்த ஒளிப்பதிவாளர்: அரவிந்த் எஸ். காஷ்யப் (காந்தாரா)
சிறந்த துணை நடிகர்: வினீத் குமார் (சாவா)
சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் (வில்லன்): அக்ஷய் கன்னா (துரந்தர்)
சிறந்த பாடலாசிரியர்: இர்ஷாத் கமில் (சயாரா)
சிறந்த பாடல்: சயாரா திரைப்படம்
சிறந்த இசையமைப்பாளர்: சஷ்வத் சச்தேவ் (துரந்தர்)
சிறந்த பின்னணிப் பாடகர்: ஃபஹீம் அப்துல்லா (சயாரா)
சிறந்த சர்வதேச திரைப்படம்: அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்
சிறந்த சர்வதேச கலைஞர்: டெய்லர் ஸ்விஃப்ட்
உலக சினிமாவில் சிறந்த பங்களிப்பு: ஜேம்ஸ் கேமரூன்
தேசிய விருதிலிருந்து வேறுபட்டது
இதற்கிடையில், இந்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கும் இந்திய சினிமாவின் உயரிய கௌரவமான 'தாதா சாகேப் பால்கே விருதுக்கும்', தனியார் அமைப்பு நடத்தும் இந்த 'தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கும்' (DPIFF) வேறுபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
=======