

Demonte Colony 3: New Update
Demonte Colony 3 Librarian First Look Video in Tamil : டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் புதிய அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிமாண்டி காலனி Part 1
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி.
ஹாரர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
டிமாண்டி காலனி Part 2
அதன்காரணமாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது.
டிமாண்டி காலனி 55 கோடி வசூல், சாதனை
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகளவில் சுமார் 55 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் மாறியது.
டிமாண்டி காலனி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டிமாண்டி காலனி Part 3 soon
அதன்படி டிமாண்டி காலனி மூன்றாம் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிமாண்டி காலனி Part 3 promo
தற்போது டிமாண்டி காலனி -3 படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் நாளை (17:03:2026) மாலை 05: 01 மணிக்கு டிமாண்டி காலனி 3 - ஆம் பாகத்தின் முக்கிய கதாப்பாத்திரமான ’லைப்ரரியன்’ கதாப்பாத்திரம் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாட்லைட் மற்றும் ஓடிடி உரிமம்
கூடுதல் தகவலாக, டிமாண்டி காலனி 3 படத்தின் சாட்லைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டிமாண்டி காலனி திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தான், அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் ஹாரர் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
===