இந்திய திரைப்படங்களில் அதிவேகமாக ரூ.1088 கோடி வசூல், வரலாறு படைத்த ’துரந்தர் தி ரிவெஞ்ச்’ !

Dhurandhar The Revenge Box Office Collection Worldwide Till Now : முதல் நான்கு நாட்களில் மட்டும் ரூ. 430 கோடி வசூலித்து துரந்தர் 2 சாதனை படைத்தது.
Dhurandhar The Revenge Box Office Collection Worldwide Till Now Creates History, Raking in ₹1,088 Crores
Dhurandhar The Revenge Box Office Collection Worldwide Till Now Creates History, Raking in ₹1,088 Croressource : google
1 min read

'Durandhar: The Revenge' Creates History, Raking in ₹1,088 Crores—the Fastest Collection in Indian Cinema!

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற துரந்தர்

Dhurandhar The Revenge Box Office Collection Worldwide Till Now : துரந்தர் ரிவெஞ்ச் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.1088 கோடி வசூல்

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் ரூ. 1088 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பான் இந்தியன் சினிமாவாக துரந்தர் 2

முதல் பாகம் இந்தியில் மட்டும் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த பாகம் பான் இந்தியன் சினிமாவாக வெளியிடப்பட்டது.

துரந்தர் படைத்த சாதனை

இதுவரையில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் பல படங்களின் வசூலை முறியடித்துள்ளது.

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் முதல் 5 நாட்களில் ரூ. 425 கோடி வசூலித்தது. அதேபோல் பதான் திரைப்படம் ரூ. 351 கோடியும்,

ஷாருக்கானின் பதான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் முதல் 5 நாட்களில் ரூ. 346 கோடியும், ஸ்த்ரீ என்ற திரைப்படம் ரூ. 291 கோடியும் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

4 நாட்களில் சாதனை

இந்த நான்கு படங்களின் சாதனையை துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் முறியடித்துள்ளது. இத்திரைப்படம் முதல் நான்கு நாட்களில் மட்டும் ரூ. 430 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

ரூ.1000 கோடி அதிவேக வசூல்

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் வரவேற்பினால் இந்திய திரைப்படங்களில் அதிவேகமாக 1000 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை துரந்தர் தி ரிவெஞ்ச் படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in