Bison: பைசனை கொண்டாடிய மணிரத்னம்- நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

Mani Ratnam on Bison Movie : தமிழ் சினிமாவில் தற்பொழுது பைசன் படம் நன்மதிப்பையும், வசூலையும் குவித்து வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களோடு இயக்குநர் மணிரத்னமும் பைசன் படத்தை பாராட்டியுள்ளார்.
Director Mani Ratnam Congratulations Making Bison Movie Mari Selvaraj Expressed His Thanks Read News in Tamil
Director Mani Ratnam Congratulations Making Bison Movie Mari Selvaraj Expressed His Thanks Read News in TamilImage Courtesy : Director Mani Ratnam - Mari Selvaraj
1 min read

பைசன் தயாரிப்பு

Mani Ratnam on Bison Movie : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அப்லாஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பைசன் வசூல்

வாழை படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜின் பைசன் திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், இந்த படத்தின் முதல் வசூலாக ஒரு நாளில் 7 முதல் 8 கோடி தாண்டி இருந்தநிலையில், தற்பொழுது 10 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல்(Bison Box Office Collection Worldwide Total) செய்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சகதுறைகளிலே பாராட்டு

சமீபகாலமாக திரைப்படங்கை பார்த்துவிட்டு சகதுறைகளில் உள்ள இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மற்ற படங்களை பாராட்டியும், சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி காந்தாரவிற்கு இதற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றால், நான் அதிர்ச்சியாகிவிடுவேன் இவர் பாராட்டியது பெருமளவில் பேசுபொருளாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது இது சினிமா துறையில் நன்விதாமாக பாராட்டுவது பரவி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் வெளியான பைசனை பார்த்துவிட்டு தி லிஜெனட் இயக்குநர் வரிசையில் ஒருவரான மணிரத்னம் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க : Bison Collection: பைசன் வசூல் இவ்வளவா? போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

மணிரத்னம் பாராட்டு

அவர் பாராட்டி வெளியிட்ட பதிவில், இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம் என பாராட்டினார்(Mani Ratnam on Bison Film). இதையடுத்து இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து மாரிசெல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார் என்று பதிவிட்டு நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in