திரையுலகில் தொடரும் போதைப்பொருள் பயன்பாடு-விஜய் ஆண்டனி பகீர்

திரையுலகில் நீண்ட நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு என்பது உள்ளதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
திரையுலகில்  தொடரும் போதைப்பொருள் பயன்பாடு-விஜய் ஆண்டனி பகீர்
1 min read

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நீண்ட நாட்களாகவே உள்ளதுதான் என்றார்.

சிகரெட் பிடிப்பதன் அடுத்த நிலை தான் போதைப்பொருள் பழக்கம் என்றும் கூறினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாலும் விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறது. உண்மை எதுவென்று தெரியவில்லை.

ஸ்ரீகாந்த் தான் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in