துல்கரின் காந்தா திரைப்பட ஓடிடி தேதி : காத்திருப்பில் ரசிகர்கள்!

Kaantha OTT : துல்கர் சல்மான், பாக்ய ஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள காந்தா திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
Dulquer Salmaan Movie Kaantha OTT Release Date Netflix in Tamil
Dulquer Salmaan Movie Kaantha OTT Release Date Netflix in TamilNetflix
1 min read

துல்கர் சல்மான் சினிமா பயணம்

Kaantha OTT Release Date Netflix in Tamil : மலையாள நடிகரான துல்கர் சல்மான இவருக்கு, மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ் , தெலுங்கு என இவர் படங்கள் வெளியாகும் அனைத்து மாநிலங்களிலும் இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நடிகர் மம்முட்டியின் மகனான துல்கரின் ன் கதைகள தேர்வு மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

தமிழில் துல்கர்

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மனியில் ஜொலித்த இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லக்கி பாஸ்கர் என தொடர்ந்து வெற்றி படங்களை தந்தார்.

அவ்வப்போது இவரின் படங்கள் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும், அதை அடுத்த படத்தில் ஈடுகட்டும் அளவிற்கு தொழில் நேர்த்தியும், கதை தேர்வு அறிவும் கொண்டவர்.

காந்தா திரைப்படம்

அதன் வரிசையில் சினிமாவை மையமாக கொண்டு துல்கர் சல்மான், பாக்ய ஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் காந்தா.

துல்கர் தேசிய விருது பெற வாய்ப்பு

இந்த திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இருப்பினும் வசூல் ரீதியில் முதல் சில நாட்களில் நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலையே இந்த படம் பெற்றது.

காந்தா படத்தில் நடித்துள்ள நான்கு முன்னணி நடிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மானுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கலாம் என்றும் பல்வேறு விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

படத்தை வாங்கிய நெட்ஃ.பிளிக்ஸ்

இந்த திரைப்படத்தை முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி இருந்தநிலையில் காந்தா திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 12ஆம் தேதி(Kaantha OTT Release Date Netflix in Tamil) வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துடைய ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டு வெளியாகும். திரையில் கண்டு ரசித்தாலும், துல்கரின் ரசிகர்கள் அவரை ஓடிடியில் பார்க்கும் ஆர்வத்தில், ஓடிடி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in